தெய்வீக திருமகானரின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் 111 குரு பூஜை

தெய்வீக திருமகானரின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் 111 குரு பூஜை (ஜெயந்தி) விழா முன்னிட்டு காலை 8 மணியளவில் பசும்பொன்னாரின் திருஉருவசிலைக்கு மாலைஅணிவித்த மகிழ்வான தருணம். அதனை தொடர்ந்து பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகானரின் ஆலயம் சென்று அவரை வணங்கிய தருணம் அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் பந்தலை பார்வையிட்டு துவக்கி வைத்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பொன் இராதாகிருஷ்ணன் அவர்களும் Ex-MLA திரு.H.ராஜா அவர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள…

மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்கள் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்கள் விழாவினை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவர்களின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து பசும்பொன் சென்று தேவர் திருமகானரின் ஜெயந்தி விழாவிற்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்ட தருணம். பிற்பகல் மாண்புமிகு மத்திய அமைச்சர் அண்ணன் திரு பொன்னார் அவர்களுடன் காளையார் கோயில் சென்று மருதுபாண்டியர் நினைவிடத்தில் வணங்குகிறோம்.தெப்பகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் திரு.கீரைத்துறைகுமார் அவர்களும் கீரைத்துறை மண்டல் தலைவர் திரு.திருமுருகன் அவர்களும் ராஜசம்பத், தமிழ்முரசு,…

பசும்பொன் சென்று திருமகானரை வணங்கி குருபூஜைக் விழாவிற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்ட தருணம்..

தெய்வீக திருமகானரின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் சென்று திருமகானரை வணங்கி குருபூஜைக் விழாவிற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்ட தருணம்..


தெய்வீக திருமகானரின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் 111 குரு பூஜை – பசும்பொன் அன்னதான பந்தல் பணிகளை பார்வையிட்ட தருணம்

தெய்வீக திருமகானரின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் அன்னதான பந்தல் பணிகளை பார்வையிட்ட தருணம்..மேலும் அன்பு தம்பி நெஞ்சம் நிறைந்த வெள்ளைச்சாமி தேவர் அவருடைய நினைவிடம் சென்று மாரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அன்பு சகோதரர் ஜோதிமுத்துராமலிங்க தேவருடன் ஓர் சந்திப்பு

சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யபட்டிருந்த தேவர் திருமகானரின் திருஉருவபட திறப்பு விழா நிகழ்ச்சி

தேசியத்தலைவர் சுதந்திர போராட்டத்தின் அவதார புருஷர் திரு.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் ஜெயந்தி விழாவையொட்டி சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யபட்டிருந்த தேவர் திருமகானரின் திருஉருவபட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை தி.நகர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மஹாலில் நடைப்பெற்றது.அதில் கலந்துகொண்டு தேவர் திருமகானரின் திருஉருவபடத்தை திறந்து வைக்கும் பாக்கியத்தை பெற்றேன்.இந்நிகழ்ச்சியில் அன்பு தம்பிகள் திருமாறன் மூர்த்தி தேவர் மற்றும் அன்பு சகோதரர் சிற்றரசு தேவர் அகில இந்திய பார்வடு பிளாக் கட்சியின்…